துப்பாக்கி சூடு..! ஜாலியன் வாலாபாக் இணையானது முடக்க வேண்டியது..! இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியை தான்-பிரேமலதா..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியை தான் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடன் இணைந்திருங்கள்