தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. மாவட்டத்தில் இயல்புநிலையை திரும்பி வருவதாகவும் ஆட்சியர் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக அரசால் சிறப்பு அதிகாரிகளாக அனுப்பப்பட்ட ககன்தீப் சிங்பேடி, போக்குவரத்துத்துறை செயலாளர் டேவிதார், தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் உள்ளிட்டோரும் தூத்துக்குடி சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள், பாதிரியார்கள் என பல்வேறு தரப்பினருடனும் காலைமுதலே ஆய்வுக் கூட்டங்களை நடத்தி கருத்துக்களை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டவிரோதமாக யாரும் தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை என விளக்கமளித்த அதிகாரிகள் 65 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பிடித்துச் செல்லப்பட்ட 68 பேரிடமும் சட்டபூர்வ நடைமுறைகளை பின்பற்றியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…