தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை தலா 20 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, தவிர்க்க முடியாத சூழலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துரதிர்ஷ்ட வசமாக 13 பேர் உயிரிழந்தது தமக்கு துயரத்தையும், மனவேதனையையும் அளித்ததாக குறிப்பிட்டடுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், இழப்பீட்டை உயர்த்தித் தர வேண்டும் என மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரண நிதியை உயர்த்தித் தருமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை பரிசீலிக்குமாறு கடந்த 25 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பல்வேறு தரப்பினரும் இதுதொடர்பாக வைத்த கோரிக்கைகளை பரசீலித்ததன் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான இழப்பீடை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர்களுக்கு இழப்பீடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை, ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தியும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தாம் உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…