துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க, சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி சென்றனர். அங்கு துப்பாக்கி சூடு, தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
இதேபோல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டார்.அங்கு கலவரம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த பிறகு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார் பன்வாரிலால் புரோகித்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…