துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பணிமனைகள் என போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் மட்டும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திமுகவினர் தோழமை கட்சியினருடன் எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதேபோல எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…