துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை தொடங்கியது!
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை தொடங்கியது .சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜிப்மர் மருத்துவர் உள்பட 3 மருத்துவர் குழு மறு பிரேத பரிசோதனை செய்கின்றன.
தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்:
இன்று மாலைக்குள் 7 பேரின் உடலையும் மறு பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மறு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவர் இன்று மதியம் தூத்துக்குடி வரவுள்ளார் என்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.மேலும் 2 தமிழக அரசு மருத்துவர்களுடன் ஜிப்மர் மருத்துவர் மறுபிரேத பரிசோதனை செய்யவுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.