துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், 7 பேரின் உடலை மறு பரிசோதனை செய்ய, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தூத்துக்குடி சென்றுள்ளார்.
தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்:
இன்று மாலைக்குள் 7 பேரின் உடலையும் மறு பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மறு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவர் இன்று மதியம் தூத்துக்குடி வரவுள்ளார் என்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.மேலும் 2 தமிழக அரசு மருத்துவர்களுடன் ஜிப்மர் மருத்துவர் மறுபிரேத பரிசோதனை செய்யவுள்ளார்.
மேலும் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், நாளை வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல்:
கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .அரசு மருத்துவர், ஒரு தடயவியல் மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஒருவாரத்துக்கு 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்ட நிலையில் உத்தரவிட்டுள்ளது. தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேதப் பரிசோதனை செய்தால் தடயங்கள் அழிக்கப்படும் என்று வழக்கறிஞர் சங்கரசுப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…