துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் 1.15 மணி நேரம் விளக்கம்! வாய்ப்பு தரவில்லை என காங்கிரஸ் வெளிநடப்பு !
துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் 1.15 மணி நேரம் விளக்கம் அளித்துள்ளார்.முதல்வர் விளக்கத்துக்கு வாய்ப்பு தரவில்லை என கூறி பேரவையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு:
திமுகவும் பேரவையில் இருந்து வெளியேறியது, சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்,அவர் கூறுகையில், ஆலை மூடல் தொடர்பாக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் . துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.மேலும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடும் வரை சட்டப்பேரவை நடவடிக்கைகளை திமுக புறக்கணிக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.