துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருச்சியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர், டார்ச்லைட்டுகளில் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 780 கிராம் எடையுள்ள தங்கத்தை, பேட்டரிகள் போல் மாற்றி மறைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், சகுல் ஹமீதுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.