துணை வேந்தரின் அதிகாரத்திற்குள் ஆளுநர் தலையிடுவது சரியில்லை !
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,துணை வேந்தரின் அதிகாரத்திற்குள் ஆளுநர் தலையிடுவது, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து முதல்வர் வாய்மூடிக் கொண்டிருக்க, மாநில ஆளுநர், துணைவேந்தரின் அதிகாரத்தையும், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் தமது கையில் எடுத்துக் கொண்டு பேட்டியளிப்பது ஆரோக்கியமான நடைமுறையாகாது என தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ள நேரத்தில், ஆளுநர் துணைவேந்தரின் அதிகாரத்திற்குள் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்திருப்பது, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநரின் இந்த அதிகார தலையீடு குறித்து குடியரசுத் தலைவரிடம் முதல்வர் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.