துணை ராணுவம் பாதுகாப்பு கர்நாடக வாழ் தமிழர்களுக்கு தேவை – இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்….!
சென்னை உயர்நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் பந்த் நடைபெற்றால் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் வழக்குக்கு அனுமதி அளித்துள்ளது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு வருவதாகவும், இதனால் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அமர்வு முன்பு வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் முறையிட்டார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.