துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பல்வேறு கட்சி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘புரட்சித் தலைவி அம்மா பேரவை’க்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பி. ரவீந்திரநாத்துக்கு புரட்சி தலைவி அம்மா பேரவையின் தேனி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.