துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் சரியல்ல! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
நன்றி சொல்ல வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார்.ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வதை சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை. எம்பி மைத்திரேயன் மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக நிர்மலா சீத்தாராமன் அலுவலக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .
பின்னர் இது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில் ,எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொல்லியிருக்கிறார் என்று மாறுபட்ட பதிலை கூறினார்.
இந்நிலையில் தற்போது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நன்றி சொல்ல வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.நன்றி சொல்ல சென்றபோது அதை ஏற்காதது நிர்மலா சீதாராமனின் நற்தன்மையற்ற செயல் ஆகும்.துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரருக்கு மருத்துவ சேவை விவகாரத்தில் எதுவும் முறைகேடு நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.