துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீது தொடர்ந்த வழக்கை கடந்த ஜூலை 17 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரித்த பின்னர் கொடுத்த புகாரை விசாரிக்க 3 மாதமாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் ஓ.பி.எஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தாதது ஏன்? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதேபோல் இன்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.இதில் தமிழக அரசு சார்பில் பதில் மனு ஓன்று தாக்கல் செயயப்பட்டது.அந்த மனுவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது . இந்நிலையில் உயர் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…