மத்திய அரசின் துணை மின்நிலையத்தில் சேலம் அருகே பற்றி எரிந்த நெருப்பை, தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின், முற்றிலும் அணைத்தனர்.
தாரமங்கலம் சாலை – கே.ஆர். தோப்பில் மத்திய அரசின் பவர்கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற துணை மின் நிலையம் இயங்குகிறது. இதில் 2 தினங்களுக்கு முன் நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர் இன்று காலை வெடித்துச் சிதறியது. டிரான்ஸ்பார்மர் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்ததோடு, அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதைக் கண்ட ஊழியர்கள் வளாகத்தில் உள்ள தீயணைப்பு சாதனங்களைக் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். தாரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் அவர்கள் திணறினர்.
சேலம் உருக்காலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் நவீன தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, ரசாயனம் கலந்த தண்ணீர், பவுடர்களை தூவி தீயை கட்டுப்படுத்த வீரர்கள் முயன்றனர். மூன்றரை மணி நேரம் தொடர்ந்து போராடிய அவர்கள், நெருப்பை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்தின் காரணமாக, உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மரில் சோதனை ஓட்டம் நடத்தாமல், இயக்கியதால் தீப்பற்றியிருக்கக் கூடும் என்று தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…