அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் தீவிரவாதம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சட்டமன்றகுழு தலைவர் ராமசாமி காவல்துறை மானியக் கோரிக்கை மீது பத்து நிமிடத்திற்குள் பேசுமாறு சபாநாயகர் கூறினார். காங்கிரஸ் சார்பாக தான் மட்டுமே பேசுவதாகவும், பேசநேரம் தரவில்லை என்றால் ராஜினமா செய்ய தயார் என்றும் அவர் கடுமையாக தெரிவித்தார்.
சபாநாயகர் அவரை நேரம் கருதி விரைந்து பேசுங்கள் என சமாதானப்படுத்தினார். அப்போது பேசிய ராமசாமி, தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும் பணத்தை வீட்டிலோ வங்கியிலோ வைக்க முடியாத அளவுக்கு திருட்டு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தீவிரவாத பயிற்சிக் கூடங்கள் உள்ளன என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேசி வருவது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலளித்த அவர் தமிழ்நாட்டில் தீவிரவாதம் இல்லை என்றும், தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…