தீவிரமடையும் மிக்ஜாம் புயல்.! 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த புயலானது சென்னையில் இருந்து 290 கிமீ தொலைவில் இந்த புயலானது நிலை கொண்டுள்ளதால் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதன் காரணமாக நிர்வாக காரங்களுக்குகாக “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல்..!
இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 20 செமீக்கு அதிகமாக அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ரெட் அலர்ட் என்பது அதீத கனமழை பெய்யும் அனைத்து துறைகளும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்படுவதாகும். மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 32 இடங்களில் கனமழையும், 2 இடங்களில் அதிக கனமழையும் பெய்துள்ளது என்றும், மீனவர்கள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வரையில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னைக்கு 290கிமீ வேகத்தில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாகவே டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே புயல் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.