தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்..!
சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்த மசோதாவில், “எம்.சி. மேத்தா வழக்கில், ஆபத்தான தொழிலில் பாதிக்கப்படும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு பெரியவர்கள், குழந்தைகள் ஆகிய இரு பிரிவினருக்கும் கட்டாயமாகக் காப்பீடு செய்ய வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, தமிழ் நாட்டில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 50 லட்சத்திற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என் பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அந்த தொகுப்பு காப்பீட்டிற்கான தொகையை வேலை கொடுக்கும் உரிமையாளர் கட்ட வேண்டும் என்பது பணி நிபந்தனையில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, தீப்பெட்டி- பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதன் உரிமையாளர் ரூ.50 ஆயிரத்துக்கு காப்பீடு செய்வதை ரூ.1 லட்சமாக உயர்த்த வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அபராதம் உயர்வு!
மற்றொரு சட்ட மசோதாவில், “அரசு அறிவிக்கும் தேசிய, பண்டிகை, சிறப்பு விடுமுறை நாட்களை செயல்படுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை கடந்த பத்து ஆண்டு காலமாக திருத்தாமல் உள்ளது. ஆகவே, அந்த தொகையை உயர்த்துவதற்கு 1958 ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு வழி வகை செய்வதாக கூறப்பட்டுள்ளது.