தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன…? அறிவித்தது தமிழக அரசு..!!

Default Image
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்தில் எந்த 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று  சுப்ரீம்கோர்ட்டு கடும் நிபந்தனைகளை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது.

 

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து,தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க எந்த 2 மணி நேரத்தில் என்பதை மாநில அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்தது.இதையடுத்து  தமிழகத்தில் பட்டாசு வெடிக்க எப்போது அனுமதிப்பது என்று  முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அ நேற்று வெளியிடப்பட்டது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது என்னவென்றால்:-தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம்.

கடந்த 23-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு  வழங்கிய உத்தரவில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும்,பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு  நிபந்தனைகளை விதித்து , தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு சுப்ரீம்கோர்ட்டு நேரம் நிர்ணயம் செய்தது. இந்த 2 மணி நேரம் போதாது என்று கூடுதலாக 2 மணி நேரம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை  சுப்ரீம்கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும், பட்டாசுகளை வெடிப்பதற்கு எந்த 2 மணி நேரம் என தமிழக அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.எனவே சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி தமிழக அரசு தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது என்று நேற்றைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்