தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது!
நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு இன்று (5/7/2018) முதல் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான மக்கள் தீபாவளியை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளையும்,ரயில்களையும் பயன்படுத்துவது வழக்கமான ஓன்று.ஆனால் ரயில் பயணத்தில் பயணச்சீட்டின் விலை குறைவு.எனவே அதிகமான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்வார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து ரயில் முன்பதிவு அதிகாரி சிவசுப்ரமணியன் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்காக ரயில்களில் வெளியூர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்தது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய டிக்கெட் முன்பதிவு 7 நிமிடங்களில் முடிந்தது. டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.
ஆனால் டிக்கெட் முன்பதிவு வெளியான சில நேரங்களில் முடிந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.