தீபாவளியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரையில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்குச் சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக தமிழக போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்து சேவையை கடந்த சின தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள், மதுரவாயல் – தாம்பரம் – பெருங்களத்தூர் வழித்தடங்களைத் தவிர்த்துச் செல்லும்.
இதற்கு பதில் நசரத் பேட்டை- அவுட்டர் ரிங் ரோடு – வண்டலூர் வழியாக ஊரப்பாக்கத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ECR வழியாக சிதம்பரம்-கடலூர்-புதுச்சேரி செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் MTC பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், வேலூர்-திருப்பத்தூர்-தருமபுரி வழித்தடப் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விக்ரவாண்டி-பண்ருட்டி-திருவண்ணாமலை வழித்தட பேருந்துகள் மட்டும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் உள்ளன.
இந்த பேருந்து மாற்றங்களுக்கேற்ப நவம்பர் 3 முதல் 5 வரை தனி வாகனங்களில் செல்பவர்களும், பேருந்து பயணிகளும் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
DINASUVADU
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…