தீபவாளிக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்……இந்த தேதிகளில்…..!!

Default Image

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரையில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Related image
தீபாவளிக்குச் சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக தமிழக போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்து சேவையை கடந்த சின தினங்களுக்கு முன்பு அறிவித்தது.  இந்நிலையில்  சென்னை கோயம்பேட்டில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள், மதுரவாயல் – தாம்பரம் – பெருங்களத்தூர் வழித்தடங்களைத் தவிர்த்துச் செல்லும்.
Related image
இதற்கு பதில் நசரத் பேட்டை- அவுட்டர் ரிங் ரோடு – வண்டலூர் வழியாக ஊரப்பாக்கத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ECR வழியாக சிதம்பரம்-கடலூர்-புதுச்சேரி செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் MTC பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், வேலூர்-திருப்பத்தூர்-தருமபுரி வழித்தடப் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image result for BUS TAMILNADU
அதுமட்டுமல்லாமல் விக்ரவாண்டி-பண்ருட்டி-திருவண்ணாமலை வழித்தட பேருந்துகள் மட்டும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் உள்ளன.
இந்த பேருந்து மாற்றங்களுக்கேற்ப நவம்பர் 3 முதல் 5 வரை தனி வாகனங்களில் செல்பவர்களும், பேருந்து பயணிகளும் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்