தி.மு.க. VS பா.ஜ.க. : தெறிக்க விட்ட ஹேஷ் டாக்..!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த  ஹேஷ் டாக்கை  ட்ரெண்டாக்கினர்.

இதேபோல்  காவிரி வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புகொடி ஏற்றப்பட்டது

சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வருவதற்கு முன்னரே கோ பாக் அமித் ஷா ( ) என்ற ஹாஷ் டக்கை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றது.

பாஜக தேசிய  தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.அரசுக்கு மக்களவைத் தேர்தலில் வலிமையை கூட்டுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வருவதற்கு முன்னரே கோ பாக் அமித் ஷா ( ) என்ற ஹாஷ் டக்கை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றது.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து வருவதை எதிர்த்து ட்விட்டரில், பாஜக ஆதரவாளர்கள் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கை பரப்பினர். அதுவும் சென்னை அளவிலான ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இடம்பிடித்தது. அதற்குள் திமுக ஆதரவாளர்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கை பரப்பினர்.

ந்நிலையில், திமுக, பாஜக இடையே மீண்டும் ட்விட்டர் மோதல் ஏற்பட்டுள்ளது. #ZeroMpDmk, #ZeroGoverenenceBJP ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்