தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி..!

Published by
Dinasuvadu desk

தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர்,

குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?.

தி.மு.க.வில் இருந்தபோது குஷ்பு ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என கூறியிருந்தார்.Related image

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘முட்டை, செருப்பால் அடித்து தி.மு.க.விலிருந்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார். தி.மு.க.வினர் யாருமே குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை – தாக்கவுமில்லை. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

21 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

1 hour ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago