தி.மு.க. மீதான வீண்பழி 2ஜி தீர்ப்பின் மூலம் துடைப்பு !
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக பின்னப்பட்ட சதிவலைகளை முறியடித்து 2ஜி வழக்கில் ஆ.ராசா வெற்றி பெற்றிருப்பதாக பாராட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்” என்ற நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக பொது செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், இந்து ராம், கி. வீரமணி, கவிஞர் வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் வரியைக் கூறி மு.க.ஸ்டாலின் தனது பேச்சைத் தொடங்கினார்.
2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா எழுதிய நூல் வெளியிடப்படும் முன்னரே அந்த வழக்கில் விடுதலை கிடைத்து விட்டதாக ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். 2ஜி புகார் எழுந்த போது ஆ.ராசாவை பதவி விலகச் சொல்லி அனைத்துத் தரப்பினரும் கூக்குரலிட்டதாகவும், தற்போது நிரவ் மோடி விவகாரம் உள்ளிட்ட ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையிலும் யாரும், யாரையும் பதவி விலகுமாறு கூறவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.