தி.மு.க தலைவர் பதவி…! வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார் …!

Default Image

தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் ஆசிபெற்றார்.

திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.

அதேபோல்  ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
அதேபோல் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.மேலும் தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் ஆசிபெற்றார்.அதேபோல் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்