எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்…!
காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கியது .
இதற்கு முன் , திமுக செயற்குழு தீர்மானம் காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கத் நிறைவேற்றியுள்ளது.
உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரிச் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்துத் தேசியப் பசுமைத்தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தவும், நேர்மையற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்து செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்ததற்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.