திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தயாரிப்பாளர் கிஷோர் குமார் கொலைமிரட்டல் விடுப்பதாக புகார்!
காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கிஷோர் குமார் கொலைமிரட்டல் விடுப்பதாக, திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் ஞாயிறன்று அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் நடைபெற இருப்பதாக கூறினார். அந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தம்மை விலகிக்கொள்ளுமாறு, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கிஷோர்குமார் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டினார். தேர்தலின் போது கலவரத்தை ஏற்படுத்துவதாக மிரட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.