திரேஸ்புரத்தில் 500 பேர் அரிவாள், பெட்ரோல் குண்டுகளுடன் முற்றுகையிட வருகை!மீறியதால் துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதட்ட நிலை நீடித்து வந்தது. 21ந் தேதி அன்றிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இரண்டு துணை வட்டட்சியாளர்கள் துப்பாக்கி சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது:
தற்போது தூத்துக்குடி மண்டல துணை கண்ணன் மற்றும் தனி துணை வாட்டாட்சியார் சேகர் ஆகிய இரண்டு துணை வட்டட்சியாளர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மண்டல துணை கண்ணன் தெரிவித்துள்ளதில்:-
எச்சரித்தும் வன்முறை தொடர்ந்ததால் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட நேரிட்டது என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.திரேஸ்புரத்தில் 500 பேர் அரிவாள், பெட்ரோல் குண்டுகளுடன் முற்றுகையிட வந்தனர்.இதனால் 3 முறை வானத்தை நோக்கி சுட்டும் வன்முறையாளர்கள் கலையவில்லை.எனவே 100 பெண்கள் உட்பட 500 பேர் காவல் குடியிருப்புக்குள் நுழைய முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று துணை வட்டாட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
திரேஸ்புரத்தில் மீண்டும் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆய்வாளருக்கு ஆணையிடப்பட்டது. தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் துப்பாக்கிச்சூடு உத்தரவு பற்றி எப்ஐஆரில் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு வட்டட்சியாளர் சேகர் கூறுகையில், ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு என்று தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட போவதாக ரகசிய தகவல் கிடைத்தது என்றும் மே 20ல் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லை என மறுக்கப்பட்டது என்று எஃப்ஐஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தப்பட்டும் கூட்டம் கலையாததால், துப்பாக்கி சூடு நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றும் எச்சரிக்கை விடுத்தும் கலையாததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது என்று எஃப்ஐஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானத்தை நோக்கி சுட்டும் கூட்டம் கலையாததால், துப்பாக்கி சூட்டுக்கு ஆணையிடப்பட்டது.மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தினார்கள் என்று துப்பாக்கி சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.