திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வங்கியைத் திறந்து தங்க நகைகள் கொள்ளை!

Published by
Venu

வங்கி மேலாளர், காவலாளி உள்பட 8 பேரிடம் போலீசார், திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், கள்ளச்சாவி உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டும், முதல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையும், இரண்டாவது மாடியில் பைவ் ஸ்டார் என்ற தனியார் நிதி நிறுவனமும் இயங்கி வருகின்றனர்.

சனி, ஞாயிறு என இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கியைத் திறக்க வந்த ஊழியர்கள், முன்பகுதி கேட் திறக்கப்பட்டிருப்பதை கண்டனர். இந்த கேட் மேலே உள்ள பைவ் ஸ்டார் நிதி நிறுவனத்துக்கும், வங்கிக்கும் பொதுவானது என்பதால், அதை பெரிதாக கண்டுகொள்ளாத வங்கி ஊழியர்கள், உள்ளே சென்றபோது வங்கியின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் அறையின் கதவு மற்றும் லாக்கர்களும் கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

இது தொடர்பாக வங்கி மேலாளர் சேகர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, விசாரணை நடத்தினார். அப்போது, வங்கி லாக்கரில் இருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், அவை வாடிக்கையாளர்கள் 6 கோடி ரூபாய்க்கு அடகு வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களைச் சேகரித்த போலீசார், வங்கியில் உள்ள 7 சி.சி.டி.வி. கேமராக்களிலும், கீழ்தளத்தில் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவிலும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறும் போலீசார், சனி, ஞாயிறு என இருநாட்கள் விடுமுறைக்கு பிறகு கொள்ளை தெரியவந்துள்ளதால், கொள்ளை எப்போது நடந்தது என்றும் விசாரித்து வருவதாக கூறுகின்றனர்.

வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய காவலாளி இல்லாத நிலையில், 5 தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மேலாளர் சேகர் மற்றும் காவலாளி உள்பட 8 வங்கி ஊழியர்கள் பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன் திரண்டனர். யாருடைய நகைகள் கொள்ளை போனது என்ற விவரத்தை வங்கி அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டி, மாவட்ட எஸ்.பி.யை சூழ்ந்து கொண்டு முறையிட்டனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

35 mins ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

1 hour ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

2 hours ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

2 hours ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

3 hours ago