திருவள்ளூர் அருகே தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண் படுகாயம்!
தீமிதி திருவிழா,திருவள்ளூர் மாவட்டம் மேல் திருத்தணியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அப்போது பெண் ஒருவர் தவறி விழுந்ததில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவிழாவையொட்டி திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.