48 லட்சம் மதிப்பிலான 200 சவரன் நகைகள்,திருவள்ளூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கத்திமுனையில் கட்டிப்போட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை அருகேயுள்ள ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. நேற்றிரவு ராமச்சந்திரனின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி ரவித்தா ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர்.
பின்னர் பீரோவை உடைத்து, 200 சவரன் நகைகளை கொள்ளையடித்த அவர்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரில் தப்பிச் சென்றனர். புகாரின் பேரில் விரைந்த போலீஸார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். ஆடிட்டர் வீட்டில் கத்திமுனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் சொகுசுக் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மின்வாரிய ஊழியர் ரவியின் வீட்டில் 30 சவரன் நகை, ஐம்பதாயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்றிரவு ரவி அவரது மனைவி மகனுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 30 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…