திருமுருகன் காந்தி இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கு…!ஆகஸ்ட்16 ஆம் தேதி தீர்ப்பு
உயர்நீதிமன்றம் திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் ஆகஸ்ட்16 ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு மீண்டும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். 2017இல் செப்டம்பரில் தடையை மீறி பேரணி, அரசுக்கு எதிராக பேசியதாக ராயப்பேட்டை போலீஸ் கைது செய்தது.
இதன் பின்னர் திருமுருகன் காந்தி புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றம் திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் ஆகஸ்ட்16 ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.
DINASUVADU