திருமங்கலம் அருகே மரக்கடை உரிமையாளரிடம் பணம் மோசடி-மிரட்டல்..!
திருமங்கலம்-சோழவந்தான் சாலையில் மரக்கடை நடத்தி வருபவர் முருகேசன். இவரிடம் கோச்சடையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மரச்சாமான்கள் வாங்கி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேல்முருகனும் அவரது உறவினர் மல்லியும் சேர்ந்து ரூ. 57 ஆயிரத்து 343 மதிப்பிலான மரக்கதவை வாங்கி உள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளனர்.
இதுபற்றி கேட்டபோது பணத்தை தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக திருமங்கலம் நகர் போலீசில், முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.