திருப்பூர் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு..!!!நோய் தாக்கும் அவலம்..!!!

Default Image

திருப்பூர்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி சிகிச்சைக்கு, போதியளவு தடுப்பூசி மருந்து இல்லாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், சமீப நாட்களாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை விரட்டுகின்றன. குறிப்பாக, நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கி ஓடும் பள்ளிக் குழந்தைகளை துரத்திச் சென்றுகடிக்கின்றன.

Related image

நாய்க்கடிக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தான் உகந்தது என்ற நிலையில், நாய்க்கடி பட்ட பலரும், மருத்துவமனை செல்கின்றனர். வெறி பிடித்த நாய், கடித்திருப்பின், ‘ரேபீஸ்’ எனப்படும் உயிர்க்கொல்லி பாதிப்புக்கு ஆளாக வேண்டி வரும். நாய்க்கடி பட்டவர்களுக்கு, ‘ஆன்ட்டி ரேபீஸ் வேக்சின்’ எனப்படும் தடுப்பூசி போடப்படுகிறது; இதன் மூலம், ‘ரேபீஸ்’, தாக்காது.

Related image

ஆனால், தாலுகா மற்றும் கிராமங்களில் உள்ள சில அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்து, போதியளவில் இருப்பு இல்லை.பாதிக்கப்பட்டவர்கள், திருப்பூர், கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கே, சிகிச்சைக்கு செல்ல வேண்டியுள்ளது.டாக்டர்கள் கூறுகையில், ‘வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு, அவசியம் ஏ.ஆர்.வி., எனப்படும் தடுப்பூசி போட வேண்டும். கடிபட்ட இடத்தில் ஏற்பட்ட காயத்தை, தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவ வேண்டும்; அந்த இடத்தில், ஏதாவது ஒரு கிருமி நாசினி (டிஞ்சர்) அல்லது ‘ஸ்பிரிட்’ தடவ வேண்டும்; காயத்துக்கு கட்டு போடக்கூடாது’ என்றனர்.மருத்துவப்பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாலுகா அளவில் உள்ள சில அரசு மருத்துவ மனைகளில், நாய்க்கடி தடுப்பூசி இருப்பு வைக்கப்படுவதில்லை. வளர்ப்பு நாய்களுக்கு தேவையான ஏ.ஆர்.வி., ஊசி மருந்துகளும் போதியளவில் இல்லாததால், அவ்வப்போது மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது,’ என்றனர்.

Related image

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு என்ற நிலையில், நாய்களை பிடித்து, கருத்தடை செய்யும் பணியை, தனியார் அமைப்புகள் தான் மேற்கொள்கின்றன. நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய நிதி ஒதுக்கி, தனியார் அமைப்பினரை ஏற்பாடு செய்வதில், உள்ளாட்சி அமைப்புகள் திணறுகின்றன. இதுவும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். இவ்விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்