திருப்பூரில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார்.இவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.சில நாட்களுக்கு முன்னால் கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார்.
திடீரென ஒருநாள் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.உடனே கார்த்திகேயன் தனது நண்பரின் ஆலோசனைப்படி மனைவிக்கு யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.இதனால் பரிதாபமாக கிருத்திகா உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திருப்பூர் காவல்துறையினர் யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கிருத்திகா கணவர் கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், லாவண்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஜாக்கிரதையாக செயல்படுதல் 304(A) பிரிவின் கீழ் திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் பிரவீன் அவரது மனைவி லாவண்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…