திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்…!டிடிவி தினகரன் 20 ரூபாய் திட்டம்…!அமைச்சர் பகீர் தகவல்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் ரூ.20 திட்டம் செல்லாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார் .
ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ் மறைவை அடுத்து காலி என அரசிதழில் வெளிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் திருவாரூர் தொகுதியும் திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் தினகரன் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் என்று கூறினார். மேலும் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதை வைத்து வெற்றி பெறுவோம் .சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்து அறிவிப்போம் என்றும் தெரிவித்துதார்.
இந்நிலையில் தற்போது தினரகன் போட்டி என்று கூறிய அறிவிப்புக்கு அமைச்சர் பதில் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனின் ரூ.20 திட்டம் செல்லாது.மேலும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்போம். அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
DINASUVADU