திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி விழா…!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி உக்ர சீனிவாசமூர்த்தி, நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பின்னர் மூலவர் சன்னதியில் இருக்கக்கூடிய உக்ர சீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
dinasuvadu.com