திருட்டு விசிடி ஒழிப்பில் திரைத்துறை ஒத்துழைப்பு அவசியம்…அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்…!!
திருட்டு வி.சி.டியை ஒழிக்க திரைத்துறையினர் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏ.வி.மேல்நிலைப்பள்ளி மானவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சர் கடம்பூர்ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை திறக்க வேண்டுமா அல்லது , மூட வேண்டுமா என்று, தருண் அகர்வால் குழு கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்றார்.
திரைத்துறையைப் பாதுகாப்பதற்காக திருட்டு விசிடிக்கு தனியாக சட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசுதான் என்றும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த திரைத்துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
dinasuvadu.com