திருச்செந்தூர் கோவிலில் முருகன் அவதரித்த வைகாசி விசாக திருநாள்யொட்டி திரண்டு பக்தர்கள் வழிபாடு!
திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
முருகன் அவதரித்த நாளாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் ஆண்டுதோறும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோவிலில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்காக திரண்டு வருகின்றனர்.
வைகாசி விசாகம் காரணமாக நள்ளிரவு 1 மணி அளவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது கடலில் புனித நீராடிய பக்தர்கள் முருகனை வழிபட்டனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.