திருச்சி விமான நிலையத்தில் 622கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய முனையம்!
திருச்சி விமான நிலையத்தின் இயக்குநர் குணசேகரன் ,திருச்சி விமான நிலையத்தில் 622 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், புதிய முனையம் அமைக்க விமான நிலையங்கள் ஆணையம் முடிவெடுத்துள்ளது. 622கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள புதிய முனையத்தில் ஒரேநேரத்தில் மூவாயிரம் பயணிகளைக் கையாளலாம்.
இதனிடையே கொச்சி மற்றும் பெங்களூருவுக்கு திருச்சியில் இருந்து விமான சேவை தொடங்கியது. காலை 6.25க்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு 7.40க்கு திருச்சி வரும் விமானம், மீண்டும் காலை 8 மணிக்கு புறப்பட்டு 9.05 மணிக்கு பெங்களூரை அடையும். பின்னர் 10.30க்கு பெங்களூரில் இருந்து 11.50-க்கு திருச்சியை வந்தடைந்து, மீண்டும் 12.10 மணிக்கு கொச்சியை சென்றடைகிறது.