திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் மற்றும் மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல்!மூவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் மற்றும் மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவர் மற்றும் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இருவர் என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
கடந்த மே 19 ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விமானம் மூலம் திருச்சி வந்தனர். அவர்களை வரவேற்க இரு கட்சி தொண்டர்களும், விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
மோதலை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பிரபு உட்பட 8 பேர் மீது பிரிவுகள் ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல் மதிமுக மாவட்ட செயலாளர் வெள்ளமண்டி சோமு உட்பட ஆறு பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச்சி விமான நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் மற்றும் மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவர் மற்றும் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இருவர் என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.