திருச்சி மாவட்டத்தில் இந்த 4 நாட்களுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி
- தமிழகம் முழுவதும் ஜன.,15 ந்தேதி தைத்திருநாள் களைக்கட்டும் ஜல்லிக்கட்டுத் திருவிழா
- திருச்சியில் 4 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு
தமிழகம் முழுவதும் ஜன.,15 தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் அன்று அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொங்கல் சிறப்பு என்றால் அதனோடு மங்காத வீரத்தினை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு மற்றொரு சிறப்பாகும்.அன்று சீறிப்பாயும் காளைகலும் அதனை அடக்க சீறிப்பாயும் இளங்காளையர்களும் என்று தமிழகமே ஜே ஜே என்ற கரகோஷத்திற்கு பஞ்சமிருக்காது.அவ்வாறு கலைக்கட்டும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது.இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 16, 17, 18, 26ஆம் தேதிகளில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதி வழங்கியதை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இதற்கான ஏற்பாடுகளை முடிக்கிவிட்டுள்ளார்.