திருச்சி அருகே பிளஸ் டூ மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!
பிளஸ் டூ மாணவியை திருச்சி மணப்பாறை அருகே ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கி விட்டு வேறொரு பெண்ணை மணக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சீத்தப்பட்டியை சேர்ந்த சிறுமியை, இதே ஊரை சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடையவே, அவரை ஏமாற்றி விட்டு, மம்மனியூர் கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை அவசர, அவசரமாக பழனிச்சாமி திருமணம் செய்து கொண்டார்.
தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிறுமி பெற்றோரிடம் விவரத்தைக் கூறி மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இப்புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததோடு, பழனிச்சாமியை கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.