திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

Default Image

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 312 பேர் பங்குபெற்றனர். 120 பேர் பரிசு பெற தகுதிபெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதனை கலக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். கலைபண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புன்னியமூர்த்தி, சிறப்பு ஒலிம்பிக் இயக்குனர் பால்தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி, நவ.17: திருச்சியில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் 312 பேர் கலந்து கொண்டனர். இதில் 120 பேர் பரிசு பெற தகுதி பெற்றனர். திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. போட்டிகளை கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார்.

இதில்  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்று பேசினார். மேலும் கலைபண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புன்னியமூர்த்தி, சிறப்பு ஒலிம்பிக் இயக்குனர் பால்தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்க்கண்ட போட்டிகள் நடைபெற்றன, செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100, 200, 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டமும், பார்வைத்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்ட தட்டு எறிதல் போட்டிகளும், குறை பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு 50, 100, 200 மீட்டர் ஓட்டம், கடுமையான பாதித்த மாற்றுத்திறனாளிகளுகு–்கு சக்கர நாற்க்காலி போட்டிகள் நடைபெற்றன. கைகள் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 50, 75, 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்ற போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வென்றவர்கள் டிசம்பர் மாதம் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். இதில் வெற்றிபெற்றவர்கள் டிசம்பர் 1ம் தேதி மாநில அளவில் நடை பெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்