திருச்சியில் மாணவ மாணவிகள் சாலை மறியல்

Default Image

திருச்சி: திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூரில் பங்குனி வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் பாலங்கள் பழுதடைந்ததால் புதிதாக கட்டப்பட்டு வருகிறதன. அதலால் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த பாலங்கள் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் பஸ்கள் சுற்றி செல்கின்றன. இதனால்  பாலத்தின் அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தகோரி நேற்று பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்காலிக பாலமும் அடிக்கடி சேதமடைந்ததால் அங்கேயும்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதலால்  வாகனங்கள் மண்ணச்சநல்லூரில் இருந்து கொள்ளிடம் டோல்கேட் வழியாக சுற்றி திருச்சிக்கு சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும், இதேபோல் மண்ணச்சநல்லூரில் படித்து வரும் நொச்சியம் அடுத்துள்ள சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.

தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த  பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி-சேலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்து போலீசார் விரைந்து வந்து  மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் மறியல் கைவிடப்பட்டது. அச்சமயம்  திருச்சி- சேலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்