திமுக வின் நெல்லை,தூத்துக்குடி,மதுரை மாவட்ட நிர்வாகிகள் அதிரடி மாற்றம் ..!
மாவட்ட வாரியாக நடைபெற்ற கள ஆய்வுக்கு பின்னர் பல மாவட்ட நிர்வாகங்கள் மாற்றப்பட்டுவிட்டன என்று மு.க.ஸ்டாலினின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக திவாகரனுக்கு பதிலாக முத்துராமலிங்கம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தேனீ ஜெயக்குமார் விடுவிக்கப்பட்டு, கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மதுரை மாநகர மாவட்ட பொறுப்பாளராக தளபதியும்,ஒன்பது உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது போல் நெல்லை,மதுரை,தூத்துக்குடி, குமாரி மாவட்ட பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.