திமுக போல் அதிமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது : அமைச்சர் ஜெயகுமார்…!!
திமுகவை போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல் தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் பங்கேற்று திட்டத்தை துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எழுப்புவதற்கு நாடாளுமன்றம் தான் சிறந்த இடம் என்று கூறினார்.
திமுகவை போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல் தமிழக பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.