திமுக -பாஜக கூட்டணியா …! திமுக -காங்கிரஸ் கூட்டணியா …!உண்மையை உடைத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்
பாஜகவுடன் திமுக கூட்டணி என்று வரும் செய்திக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பதில் ஒன்றை கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
அதே போல், ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் இந்த வருகையில் திமுகவில் சலசலப்பு ஏற்படுள்ளது.அதேபோல் அதன் கூட்டணி கட்சியுமான காங்கிரசும் கலக்கத்தில் இருந்தது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என்ற தகவல் அதிக அளவில் வெளியாகி வருகின்றது.இருந்தாலும் தமிழக பாஜக அதை மறுத்து வந்தது.
பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து தகவல் ஒன்றை கூறினார் .அவர் கூறுகையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தலில் நிதின் கட்கரி, முரளிதரராவ் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர் நேற்று திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் உரையை ஆரம்பித்தார்.அவர் பேசுகையில், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா,முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிய வா, அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம், இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த பேச்சு மற்றும் பாஜகவுடன் திமுக கூட்டணி என்று வரும் செய்திக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பதில் ஒன்றை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதிசெய்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU