நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் இந்த வருகையில் திமுகவில் சலசலப்பு ஏற்படுள்ளது.அதேபோல் அதன் கூட்டணி கட்சியுமான காங்கிரசும் கலக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பது குறித்து எங்களுக்கு தகவல் வரவில்லை .பாஜக தலைமையிடமிருந்து தகவல் வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…